ஹதீஸ்கள்
#2561
ஸஹீஹ் அல்-புகாரீ - Contract of Manumission
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாய் இருந்த) பரீரா (ரலி), தாம் (தம் உரிமையாளர்களிடம்) எழுதி வாங்கிய விடுதலை ஆவணத்திற்கான தொகையைச் செலுத்துவதற்கு உதவி கோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச் சென்று, (அவர்களின் சம்மதத்தைக் கேள்.) நான் உன் சார்பாக உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும். இதை அவர்கள் விரும்பினால், அவ்வாறு நான் செய்கிறேன்” என்று கூறினேன். அவ்வாறே, பரீரா (ரலி) தன் உரிமை யாளர்களிடம் கேட்க, அவர்கள் மறுத்து, ‘‘உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) மூலம் அவர் (ஆயிஷா (ரலி) அவர்கள்) இறைவனிடம் நன்மையைப் பெற விரும்பு வாராயின் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டார் கள். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ அவரை வாங்கி விடுதலை செய்துவிடு, ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, ‘‘மக்களில் சிலருக்கு என்னவாயிற்று? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார் களே! இறைச் சட்டத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால், அது செல்லாது; அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி வாய்ந்ததும் ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن ابن شهاب، عن عروة، ان عايشة رضى الله عنها اخبرته ان بريرة جاءت تستعينها في كتابتها، ولم تكن قضت من كتابتها شييا، قالت لها عايشة ارجعي الى اهلك، فان احبوا ان اقضي عنك كتابتك، ويكون ولاوك لي فعلت. فذكرت ذلك بريرة لاهلها فابوا وقالوا ان شاءت ان تحتسب عليك فلتفعل، ويكون ولاوك لنا، فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال لها رسول الله صلى الله عليه وسلم " ابتاعي فاعتقي، فانما الولاء لمن اعتق ". قال ثم قام رسول الله صلى الله عليه وسلم فقال " ما بال اناس يشترطون شروطا ليست في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فليس له، وان شرط ماية مرة، شرط الله احق واوثق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Contract of Manumission
- Hadith Index
- #2561
- Book Index
- 2
Grades
- -
