ஹதீஸ்கள்
#2548
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு. இதை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன்மீது சத்திய மாக! அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாம லிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، سمعت سعيد بن المسيب، يقول قال ابو هريرة رضى الله عنه قال رسول الله صلى الله عليه وسلم " للعبد المملوك الصالح اجران، والذي نفسي بيده لولا الجهاد في سبيل الله والحج وبر امي، لاحببت ان اموت وانا مملوك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2548
- Book Index
- 31
Grades
- -
