ஹதீஸ்கள்
#2545
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர் களை (ஒருமுறை) பார்த்தேன். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும் அவர்களின் அடிமைமீது (அதே போன்ற) ஓர் (புதிய) மேலங்கியும் இருந்தது. அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அப்போது அதற்கு அவர்கள் பின் வருமாறு சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள். பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، حدثنا واصل الاحدب، قال سمعت المعرور بن سويد، قال رايت ابا ذر الغفاري رضى الله عنه وعليه حلة وعلى غلامه حلة فسالناه عن ذلك فقال اني ساببت رجلا فشكاني الى النبي صلى الله عليه وسلم، فقال لي النبي صلى الله عليه وسلم " اعيرته بامه ". ثم قال " ان اخوانكم خولكم جعلهم الله تحت ايديكم، فمن كان اخوه تحت يده فليطعمه مما ياكل، وليلبسه مما يلبس، ولا تكلفوهم ما يغلبهم، فان كلفتموهم ما يغلبهم فاعينوهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2545
- Book Index
- 28
Grades
- -
