ஹதீஸ்கள்
#2543
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிபனூ தமீம்’ குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்க லானேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே அதிகக் கடுமையுடன் (மகா பொய்யன்) தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்” என்று கூறினார்கள். (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருள்கள்” என்று கூறினார்கள். (ஒருமுறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி” என்று கூறினார்கள்.23 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا جرير، عن عمارة بن القعقاع، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال لا ازال احب بني تميم. وحدثني ابن سلام اخبرنا جرير بن عبد الحميد عن المغيرة عن الحارث عن ابي زرعة عن ابي هريرة. وعن عمارة عن ابي زرعة عن ابي هريرة قال ما زلت احب بني تميم منذ ثلاث سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول فيهم، سمعته يقول " هم اشد امتي على الدجال ". قال وجاءت صدقاتهم، فقال رسول الله صلى الله عليه وسلم " هذه صدقات قومنا ". وكانت سبية منهم عند عايشة. فقال " اعتقيها فانها من ولد اسماعيل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2543
- Book Index
- 26
Grades
- -
