ஹதீஸ்கள்
#2542
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தபோது அவர்களிடம் (‘அஸ்ல்’ எனும் புணர்ச்சி இடைமுறிப்பு செய்வது பற்றி) கேட்டேன். அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் யிபனூ முஸ்தலிக்’ (குலத் தாருக்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுப் போர்க் கைதிகளில் சிலர் எங்களுக்குத் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (இந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்ய நாங்கள் விரும்பினோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டோம். அதற்கு, ‘‘நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று பதிலளித்தார்கள்.22 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ربيعة بن ابي عبد الرحمن، عن محمد بن يحيى بن حبان، عن ابن محيريز، قال رايت ابا سعيد رضى الله عنه فسالته فقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في غزوة بني المصطلق فاصبنا سبيا من سبى العرب، فاشتهينا النساء فاشتدت علينا العزبة واحببنا العزل، فسالنا رسول الله صلى الله عليه وسلم فقال " ما عليكم ان لا تفعلوا، ما من نسمة كاينة الى يوم القيامة الا وهى كاينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2542
- Book Index
- 25
Grades
- -
