ஹதீஸ்கள்
#2541
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அப்துல்லாஹ் பின் அவ்ன் அல்முஸ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் யிபனூ முஸ்தலிக்’ குலத்தார் பாராமுகமாக இருந்தபோது, அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக்கொண்டிருந்தன. அவர் களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களுடைய மக்களை (பெண்கள், பிள்ளைகுட்டிகளை) போர்க் கைதிகளாக சிறைபிடித்தார்கள்; அன்று தான் ஜுவைரிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்.21 அத்தியாயம் :
حدثنا علي بن الحسن، اخبرنا عبد الله، اخبرنا ابن عون، قال كتبت الى نافع فكتب الى ان النبي صلى الله عليه وسلم اغار على بني المصطلق وهم غارون وانعامهم تسقى على الماء، فقتل مقاتلتهم، وسبى ذراريهم، واصاب يوميذ جويرية. حدثني به عبد الله بن عمر، وكان في ذلك الجيش
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2541
- Book Index
- 24
Grades
- -
