ஹதீஸ்கள்
#2540
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: (ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) யிஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் (முஸ்லிலிம்களாகி) தம்மிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட) தங்களின் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் தங்களிடமே திருப்பித் தந்துவிடும்படி நபியவர்களிடம் அவர்கள் கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அக் குழுவினரிடம்), ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற(மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையாகப் பேசுவதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆகவே, செல்வங் கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாட்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய (குலத்தாரின்) கைதிகளைத் திருப்பித் தந்துவிடலாம் எனக் கருதுகிறேன். உங்களில் யார் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர், அல்லாஹ் நமக்கு (இனி) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், ‘யிநாங்கள் மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் (இதற்கு மனப்பூர்வமாகச்) சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்க ளுடைய தலைவர்கள் (உங்களுடன் கலந்துபேசி) உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களுடைய தலைவர்கள் அவர்களு டன் (கலந்து) பேசினர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.20 அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்துவிட்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2540
- Book Index
- 23
Grades
- -