ஹதீஸ்கள்
#2538
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங் களையும் அறுத்து தர்மம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்துவந்த (தர்ம) காரியங் களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகின் றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான நன்மை)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்” என்று கூறினார்கள்.17 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، حدثنا ابو اسامة، عن هشام، اخبرني ابي ان حكيم بن حزام رضى الله عنه اعتق في الجاهلية ماية رقبة، وحمل على ماية بعير، فلما اسلم حمل على ماية بعير واعتق ماية رقبة، قال فسالت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله، ارايت اشياء كنت اصنعها في الجاهلية، كنت اتحنث بها، يعني اتبرر بها، قال فقال رسول الله صلى الله عليه وسلم " اسلمت على ما سلف لك من خير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2538
- Book Index
- 22
Grades
- -
