ஹதீஸ்கள்
#2507
ஸஹீஹ் அல்-புகாரீ - Partnership
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘திஹாமா’விலுள்ள ‘துல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வங்களாக) ஆடுகளை, அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்கவைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். பிறகு அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. ஆகவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓட விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்கின்றதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே என்று நாங்கள் அஞ்சுகின்றோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?றற என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்பட்சத்தில் அதை உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி இதோ உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர் களின்) கத்திகளாகும்” என்று பதிலளித்தார்கள்.12 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا وكيع، عن سفيان، عن ابيه، عن عباية بن رفاعة، عن جده، رافع بن خديج رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بذي الحليفة من تهامة، فاصبنا غنما وابلا، فعجل القوم، فاغلوا بها القدور، فجاء رسول الله صلى الله عليه وسلم فامر بها فاكفيت، ثم عدل عشرا من الغنم بجزور، ثم ان بعيرا ند وليس في القوم الا خيل يسيرة فرماه رجل فحبسه بسهم، فقال رسول الله صلى الله عليه وسلم " ان لهذه البهايم اوابد كاوابد الوحش، فما غلبكم منها فاصنعوا به هكذا ". قال قال جدي يا رسول الله انا نرجو او نخاف ان نلقى العدو غدا وليس معنا مدى، فنذبح بالقصب فقال " اعجل او ارني، ما انهر الدم وذكر اسم الله عليه فكلوا، ليس السن والظفر، وساحدثكم عن ذلك، اما السن فعظم، واما الظفر فمدى الحبشة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Partnership
- Hadith Index
- #2507
- Book Index
- 22
Grades
- -
