ஹதீஸ்கள்
#2506
ஸஹீஹ் அல்-புகாரீ - Partnership
ஜாபிர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹிஜ்ஜா நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொண்டு வந்தார்கள். (இஹ்ராம் கட்டியபோது உம்ரா) எதுவும் அவர்களி(ன் எண்ணத்தி)ல் கலந்திருக்கவில்லை. நாங்கள் வந்து சேர்ந்தபோது எங்கள் இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளும்படியும் எங்கள் மனைவியருடன் நாங்கள் சேர்ந்துகொள்ளும்படியும் நபியவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். (ஹஜ் மாதங்களில் உம்ரா கூடாது என்று கருதிவந்த) மக்களிடையே இது தொடர்பான பேச்சு (வேகமாகப்) பரவியது. லிஅறிவிப்பாளர் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘எங்களில் ஒருவர் தாம்பத்திய உறவை முடித்த கையோடு மினா செல்வதா?” என்று (மக்கள் பேசிக்கொண்டதை எடுத்துச்) சொன்னார் கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையால் சைகை செய்து காட்டி னார்கள்லி இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அதில், ‘‘மக்கள் சிலர் இப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவனும் ஆவேன். ‘(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்யலாம் என்ற) என் கட்டளை தொடர்பாக நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருக்கமாட்டேன். என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) இருப்பேன்.” என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டுமா? இல்லை, என்றைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்களுக்கு மட்டும்) இல்லை; மாறாக, என்றைக்கும்தான்” என்று கூறினார்கள். அப்போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள். அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே (ஹஜ்ஜுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் போன்றதற்கே நானும் இஹ்ராம் கட்டுகிறேன்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர் களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தமது குர்பானி பிராணியில் அலீ (ரலி) அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண் டார்கள்.11 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، اخبرنا عبد الملك بن جريج، عن عطاء، عن جابر.وعن طاوس، عن ابن عباس رضى الله عنهم قال قدم النبي صلى الله عليه وسلم صبح رابعة من ذي الحجة مهلين بالحج، لا يخلطهم شىء، فلما قدمنا امرنا فجعلناها عمرة، وان نحل الى نساينا، ففشت في ذلك القالة. قال عطاء فقال جابر فيروح احدنا الى منى وذكره يقطر منيا. فقال جابر بكفه، فبلغ النبي صلى الله عليه وسلم فقام خطيبا فقال " بلغني ان اقواما يقولون كذا وكذا، والله لانا ابر واتقى لله منهم، ولو اني استقبلت من امري ما استدبرت ما اهديت، ولولا ان معي الهدى لاحللت ". فقام سراقة بن مالك بن جعشم فقال يا رسول الله هي لنا او للابد فقال " لا بل للابد ". قال وجاء علي بن ابي طالب فقال احدهما يقول لبيك بما اهل به رسول الله صلى الله عليه وسلم. وقال وقال الاخر لبيك بحجة رسول الله صلى الله عليه وسلم فامر النبي صلى الله عليه وسلم ان يقيم على احرامه، واشركه في الهدى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Partnership
- Hadith Index
- #2506
- Book Index
- 21
Grades
- -
