ஹதீஸ்கள்
#2469
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை ஒரு மாத காலத்திற்கு விலக்கிவைப்பதாக சத்தியம் செய்திருந் தார்கள். அவர்களின் பாதம் (நரம்பு) பிசகி விட்டிருந்தது; ஆகவே, அவர்கள் தமது உயரமான மாடியறை ஒன்றில் அமர்ந் திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘தாங்கள் தங்கள் துணைவியரை விவாகரத்து (தலாக்) செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இல்லை; ஆனால், நான் அவர்களிடமிருந்து ஒரு மாத காலம் விலகியிருப்பதாக சத்தியம் செய்துள்ளேன்” என்று கூறினார்கள்; அவ்வாறே இருபத் தொன்பது நாட்கள் (அதில்) தங்கியிருந் தார்கள். பிறகு இறங்கி வந்து தம் துணைவி யரிடம் சென்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابن سلام، حدثنا الفزاري، عن حميد الطويل، عن انس رضى الله عنه قال الى رسول الله صلى الله عليه وسلم من نسايه شهرا، وكانت انفكت قدمه فجلس في علية له، فجاء عمر، فقال اطلقت نساءك قال " لا، ولكني اليت منهن شهرا ". فمكث تسعا وعشرين، ثم نزل، فدخل على نسايه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2469
- Book Index
- 30
Grades
- -
