ஹதீஸ்கள்
#2468
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யரில் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் பேராவல் கொண்டிருந் தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லாஹ் (குர்ஆனில்), ‘‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்துவிட்டி ருக்கின்ற”’ (66:4) என்று கூறியிருந்தான். (ஒருமுறை) உமர் (ரலி) அவர்களு டன் நான் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜிலிருந்து திரும்பும்போது) உமர் (ரலி) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக்கொண்டு ஒதுங்கிச் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது நான், ‘‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்)› என்று வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும்தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது: நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவின் மேட்டுப் பகுதியில் ஒரு குடியிருப்பாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் தங்குவோம். அவர் ஒருநாள் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பார். நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களுடைய அன்றைய நாளின் கட்டளைகளையும் போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்களை மிகைத்துவிடுபவர்களாக இருந்துவந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, எங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது, பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சிவிடக்கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம்முடைய மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக்கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். (ஒருநாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவர் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். அதற்கு அவர், ‘‘நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீங்கள் ஏன் வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள்கூட நபியவர்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகல் முதல் இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சியுற்றேன். ‘‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று கூறினேன். பிறகு உடை அணிந்துகொண்டு (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பகல் முதல் இரவுவரை கோபமாக இருக்கிறார் களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதில ளித்தார். நான், ‘‘அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டு விட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் நம்மீது கோபமடைந்து நாம் அழிந்துபோய்விடு வோம் என்னும் அச்சம் அவருக்கில் லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதிகமாக (தேவைகளை) நீ கேட்காதே. எந்த விஷயத்திலும் அவர் களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா (ரலி)) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதைவைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல் நடந்துகொண்டு) விடாதே” என்று நான் (அறிவுரை) கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், (சிரியா நாட்டில் வாழும்) யிஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள் (மதீனா)மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தமது முறை வந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, ‘‘அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா?” என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘‘மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘‘என்ன அது? ஃகஸ்ஸானியர்கள் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். ‘‘இல்லை. அதை விடப் பெரிய, அதைவிட (அதிகக்) கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்” என்று கூறினார். நான், ‘‘(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாகி விட்டார். நான் இப்படி (விரைவில்) நடக்கத்தான்போகிறது என்று எண்ணி யிருந்தேன்” என்று கூறிவிட்டு, உடை அணிந்துகொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகை தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் (தொழுகை முடிந்தவுடன்) தமது மாடியறைக்குள் (சென்று) அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். நான், ‘‘ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்து (தலாக்) செய்து விட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘எனக்கொன்றும் தெரியாது. அவர்கள் அந்த மாடி அறையில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார். நான் சொற்பொழிவு மேடைக்கு அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தார் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, நபி (ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமையிடம், ‘‘உமருக்காக நபியவர்களிடம் (அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன். அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘‘உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். ஆகவே, நான் திரும்பி வந்து சொற்பொழிவு மேடைக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர் அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக நீ (நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் (உள்ளே சென்று வந்து) முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் (மறுபடியும்) சொற்பொழிவு மேடைக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அப்போதும் அந்த அடிமை முன்போலவே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே, நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. ஆகவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்றுகொண்டே, ‘‘தங்கள் துணைவியரை தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். அவர்கள் தமது பார்வையை என் பக்கம் உயர்த்தி, ‘‘இல்லை” என்று கூறினார்கள். பிறகு, நான் நின்றுகொண்டே (அவர்களுடைய கோபத்தைக் குறைத்து) அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: அல்லாஹ்வின் தூதரே! குறைஷியரான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் (மதீனாவாசிகளிடம்) நாங்கள் வந்தபோது... (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கி விட்டனர்)... என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற் றையும் கூறினேன். (அதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘நான் ஹஃப்ஸாவிடம் சென்று, யிஉன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா (ரலி) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவ ராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துபோய் (அவரைப் போல நடந்துகொண்டு)விடாதே’ என்று கூறி னேன்” எனச் சொன்னேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்துகொண்டேன். பிறகு என் பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர. அப்போது நான், ‘‘தங்கள் சமுதாயத்தாருக்கு உலகச் செல்வங்களைத் தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக் கும் கிழக்கு ரோமானியருக்கும் லிஅவர்கள் அல்லாஹ்வை வழிபடாதவர்களாக இருந்தும்லி (உலகச் செல்வங்கள்) தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் (தலையணைமீது) சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, ‘‘கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தமக்குரிய இன்பங்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்ட மக்கள் ஆவர்” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவசரப் பட்டுக் கேட்டுவிட்ட) எனக்காகப் பாவ மன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களின் அந்த இரக சியத்தை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொல்லி பரப்பிய காரணத்தாலேயே நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கி னார்கள்.15 மேலும், ‘‘அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள். அவர்களை அல்லாஹ் கண்டித்தபோது தம் துணைவியர்மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணமாகும். இருபத் தொன்பது நாட்கள் கழிந்தபொழுது, ஆரம்பமாக நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமே சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப்போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நாங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கின்றோம்? (ஒரு நாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டே வருகின்றேனே!” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாட்களாகவே இருந்தது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: அப்போதுதான், (நபி (ஸல்) அவர் களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகிவிடுவது ஆகிய இரு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, ‘‘உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்: நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும்வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்லமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறிவிடுங்கள்: நீங்கள் உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை யும் மறுமையையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்துவைத்துள்ளான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (33:28, 29) (ஆகவே, உங்கள் முடிவு என்ன?)” என்று கேட்டார்கள். நான், ‘‘இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் அனுமதி கேட்பேன்! நானோ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமையையும்தான் விரும்புகிறேன்” என்று கூறினேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் (யிதம்முடன் வாழ்வது, தம்மைவிட்டுப் பிரிந்துவிடுவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னதைப் போன்றே சொன்னார்கள்.16 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عبيد الله بن عبد الله بن ابي ثور، عن عبد الله بن عباس رضى الله عنهما قال لم ازل حريصا على ان اسال عمر رضى الله عنه عن المراتين من ازواج النبي صلى الله عليه وسلم اللتين قال الله لهما {ان تتوبا الى الله فقد صغت قلوبكما} فحججت معه فعدل وعدلت معه بالاداوة، فتبرز حتى جاء، فسكبت على يديه من الاداوة، فتوضا فقلت يا امير المومنين من المراتان من ازواج النبي صلى الله عليه وسلم اللتان قال لهما {ان تتوبا الى الله} فقال واعجبي لك يا ابن عباس عايشة وحفصة، ثم استقبل عمر الحديث يسوقه، فقال اني كنت وجار لي من الانصار في بني امية بن زيد، وهى من عوالي المدينة، وكنا نتناوب النزول على النبي صلى الله عليه وسلم فينزل يوما وانزل يوما، فاذا نزلت جيته من خبر ذلك اليوم من الامر وغيره، واذا نزل فعل مثله، وكنا معشر قريش نغلب النساء، فلما قدمنا على الانصار اذا هم قوم تغلبهم نساوهم، فطفق نساونا ياخذن من ادب نساء الانصار، فصحت على امراتي، فراجعتني، فانكرت ان تراجعني، فقالت ولم تنكر ان اراجعك فوالله ان ازواج النبي صلى الله عليه وسلم ليراجعنه، وان احداهن لتهجره اليوم حتى الليل. فافزعني، فقلت خابت من فعل منهن بعظيم. ثم جمعت على ثيابي، فدخلت على حفصة فقلت اى حفصة، اتغاضب احداكن رسول الله صلى الله عليه وسلم اليوم حتى الليل فقالت نعم. فقلت خابت وخسرت، افتامن ان يغضب الله لغضب رسوله صلى الله عليه وسلم فتهلكين لا تستكثري على رسول الله صلى الله عليه وسلم ولا تراجعيه في شىء ولا تهجريه، واساليني ما بدا لك، ولا يغرنك ان كانت جارتك هي اوضا منك واحب الى رسول الله صلى الله عليه وسلم يريد عايشة وكنا تحدثنا ان غسان تنعل النعال لغزونا، فنزل صاحبي يوم نوبته فرجع عشاء، فضرب بابي ضربا شديدا، وقال انايم هو ففزعت فخرجت اليه. وقال حدث امر عظيم. قلت ما هو اجاءت غسان قال لا، بل اعظم منه واطول، طلق رسول الله صلى الله عليه وسلم نساءه. قال قد خابت حفصة وخسرت، كنت اظن ان هذا يوشك ان يكون، فجمعت على ثيابي، فصليت صلاة الفجر مع النبي صلى الله عليه وسلم فدخل مشربة له فاعتزل فيها، فدخلت على حفصة، فاذا هي تبكي. قلت ما يبكيك اولم اكن حذرتك اطلقكن رسول الله صلى الله عليه وسلم قالت لا ادري هو ذا في المشربة. فخرجت، فجيت المنبر، فاذا حوله رهط يبكي بعضهم، فجلست معهم قليلا ثم غلبني ما اجد، فجيت المشربة التي هو فيها فقلت لغلام له اسود استاذن لعمر. فدخل، فكلم النبي صلى الله عليه وسلم ثم خرج، فقال ذكرتك له، فصمت، فانصرفت حتى جلست مع الرهط الذين عند المنبر، ثم غلبني ما اجد فجيت، فذكر مثله، فجلست مع الرهط الذين عند المنبر، ثم غلبني ما اجد فجيت الغلام. فقلت استاذن لعمر. فذكر مثله، فلما وليت منصرفا، فاذا الغلام يدعوني قال اذن لك رسول الله صلى الله عليه وسلم. فدخلت عليه، فاذا هو مضطجع على رمال حصير ليس بينه وبينه فراش، قد اثر الرمال بجنبه، متكي على وسادة من ادم حشوها ليف، فسلمت عليه، ثم قلت وانا قايم طلقت نساءك فرفع بصره الى، فقال " لا ". ثم قلت وانا قايم استانس يا رسول الله، لو رايتني، وكنا معشر قريش نغلب النساء، فلما قدمنا على قوم تغلبهم نساوهم، فذكره، فتبسم النبي صلى الله عليه وسلم، ثم قلت لو رايتني، ودخلت على حفصة، فقلت لا يغرنك ان كانت جارتك هي اوضا منك واحب الى النبي صلى الله عليه وسلم يريد عايشة فتبسم اخرى، فجلست حين رايته تبسم، ثم رفعت بصري في بيته، فوالله ما رايت فيه شييا يرد البصر غير اهبة ثلاثة. فقلت ادع الله فليوسع على امتك، فان فارس والروم وسع عليهم واعطوا الدنيا، وهم لا يعبدون الله، وكان متكيا. فقال " اوفي شك انت يا ابن الخطاب اوليك قوم عجلت لهم طيباتهم في الحياة الدنيا ". فقلت يا رسول الله استغفر لي. فاعتزل النبي صلى الله عليه وسلم من اجل ذلك الحديث حين افشته حفصة الى عايشة، وكان قد قال " ما انا بداخل عليهن شهرا ". من شدة موجدته عليهن حين عاتبه الله. فلما مضت تسع وعشرون دخل على عايشة فبدا بها، فقالت له عايشة انك اقسمت ان لا تدخل علينا شهرا، وانا اصبحنا لتسع وعشرين ليلة، اعدها عدا. فقال النبي صلى الله عليه وسلم " الشهر تسع وعشرون ". وكان ذلك الشهر تسع وعشرون. قالت عايشة فانزلت اية التخيير فبدا بي اول امراة، فقال " اني ذاكر لك امرا، ولا عليك ان لا تعجلي حتى تستامري ابويك ". قالت قد اعلم ان ابوى لم يكونا يامراني بفراقك. ثم قال " ان الله قال {يا ايها النبي قل لازواجك} الى قوله { عظيما} ". قلت افي هذا استامر ابوى فاني اريد الله ورسوله والدار الاخرة. ثم خير نساءه، فقلن مثل ما قالت عايشة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2468
- Book Index
- 29
Grades
- -
