ஹதீஸ்கள்
#2466
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டுகொண்டிருப்ப தைப் பார்த்தார். யிஎனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று (தமது மனத்திற்குள்) கூறிக்கொண்டார். பிறகு கிணற்றில் இறங்கி, (தோலால் ஆன) தமது காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டுவந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இந்த மிருகங்கள் விஷயத்திலுமா எங்களுக்குப் நற்பலன் உண்டு?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உயிர் பிராணிகள் ஒவ்வொன் றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் கிடைக்கும்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن سمى، مولى ابي بكر عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " بينا رجل بطريق، اشتد عليه العطش فوجد بيرا فنزل فيها فشرب، ثم خرج، فاذا كلب يلهث ياكل الثرى من العطش، فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ مني، فنزل البير، فملا خفه ماء، فسقى الكلب، فشكر الله له، فغفر له ". قالوا يا رسول الله وان لنا في البهايم لاجرا فقال " في كل ذات كبد رطبة اجر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2466
- Book Index
- 27
Grades
- -
