ஹதீஸ்கள்
#2464
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன்.10 அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவையே அவர்கள் குடித்துவந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ‘‘(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘வெளியே சென்று இதை ஊற்றிவிடு” என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றிவிட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப் பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)” என்று கேட்டார்கள். அப்போதுதான், ‘‘யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் (தடை செய்யப்பட்டதை முன்பு) உட்கொண்டதால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை” (5:93) எனும் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.11 அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم ابو يحيى، اخبرنا عفان، حدثنا حماد بن زيد، حدثنا ثابت، عن انس رضى الله عنه كنت ساقي القوم في منزل ابي طلحة، وكان خمرهم يوميذ الفضيخ، فامر رسول الله صلى الله عليه وسلم مناديا ينادي " الا ان الخمر قد حرمت ". قال فقال لي ابو طلحة اخرج فاهرقها، فخرجت فهرقتها، فجرت في سكك المدينة فقال بعض القوم قد قتل قوم وهى في بطونهم. فانزل الله {ليس على الذين امنوا وعملوا الصالحات جناح فيما طعموا} الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2464
- Book Index
- 25
Grades
- -
