ஹதீஸ்கள்
#2463
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அப்துர் ரஹ்மான் பின் ஹுர் முஸ் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில், தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என்ன இது? (நபியவர்களின்) இ(ந்த உபதேசத்)தைப் புறக்கணிப்பவர்களாகவே உங்களை நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களுக் குப் பிடிக்காவிட்டாலும்) இதை நான் உங்களுக்கு வலியுறுத்திக்கொண்டே இருப்பேன்” என்று கூறுவார்கள்.9 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن الاعرج، عن ابي هريرة، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يمنع جار جاره ان يغرز خشبه في جداره ". ثم يقول ابو هريرة ما لي اراكم عنها معرضين والله لارمين بها بين اكتافكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2463
- Book Index
- 24
Grades
- -
