ஹதீஸ்கள்
#2437
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சல்மான் பின் ரபீஆ அல்பாஹிலீ (ரலி) அவர்களுடனும் ஸைத் பின் ஸூஹான் (ரஹ்) அவர்களுடனும் ஒரு போரில் கலந்துகொண்டபோது சாட்டை ஒன்றைக் கண்(டு எடுத்துக்கொண்)டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘‘அதைப் போட்டு விடு” என்று கூறினார்கள். நான், ‘‘இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்துவிடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பியபோது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அங்கு உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு பொற்காசுகள் இருந்த ஒரு பையைக் கண்டேன். அதை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். ஒரு வருட காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன். பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ‘‘ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘‘அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கையையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்துகொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உஸ்மான் பின் ஜபலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப் படுகிறது: அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், ‘‘(இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைப் பின்னர் மக்காவில் சந்தித்தேன். அவர், யிமூன்றாண்டுகள் அறிவிக்க வேண்டுமா; ஓராண்டா’ எதை சுவைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن سلمة بن كهيل، قال سمعت سويد بن غفلة، قال كنت مع سلمان بن ربيعة، وزيد بن صوحان في غزاة، فوجدت سوطا. فقال لي القه. قلت لا، ولكن ان وجدت صاحبه، والا استمتعت به. فلما رجعنا حججنا فمررت بالمدينة، فسالت ابى بن كعب رضى الله عنه فقال وجدت صرة على عهد النبي صلى الله عليه وسلم فيها ماية دينار، فاتيت بها النبي صلى الله عليه وسلم فقال " عرفها حولا ". فعرفتها حولا ثم اتيت، فقال " عرفها حولا ". فعرفتها حولا ثم اتيته، فقال " عرفها حولا ". فعرفتها حولا ثم اتيته الرابعة فقال " اعرف عدتها ووكاءها ووعاءها، فان جاء صاحبها والا استمتع بها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2437
- Book Index
- 12
Grades
- -
