ஹதீஸ்கள்
#2429
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, கண்டெடுக்கப் பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள். அந்த மனிதர், ‘‘வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் உரிமையாளர் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ربيعة بن ابي عبد الرحمن، عن يزيد، مولى المنبعث عن زيد بن خالد رضى الله عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فساله عن اللقطة. فقال " اعرف عفاصها ووكاءها، ثم عرفها سنة، فان جاء صاحبها، والا فشانك بها ". قال فضالة الغنم قال " هي لك او لاخيك او للذيب ". قال فضالة الابل قال " ما لك ولها، معها سقاوها وحذاوها، ترد الماء وتاكل الشجر، حتى يلقاها ربها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2429
- Book Index
- 4
Grades
- -
