ஹதீஸ்கள்
#2428
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப் பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்துகொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். பின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்துகொள்வார். மேலும், அது அவரிடத் தில் அடைக்கலப் பொருளாக இருக்கும். ‘‘இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்களின் சொல்லா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.4 பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), ‘‘வழிதவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை நீ எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், ‘‘அதையும்கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். பிறகு அந்த நபர், ‘‘வழிதவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை (அப்படியே) விட்டுவிடுவீராக!. ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கிறது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கிறது; அதை அதன் உரிமையாளர் அடைந்துகொள்ளும்வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கிறது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக்கொள்கிறது;) மரங்களிலிருந்து (இலை தழைகளைத்) தின்கிறது” என்று பதில் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني سليمان، عن يحيى، عن يزيد، مولى المنبعث انه سمع زيد بن خالد رضى الله عنه يقول سيل النبي صلى الله عليه وسلم عن اللقطة فزعم انه قال " اعرف عفاصها ووكاءها، ثم عرفها سنة ". يقول يزيد ان لم تعترف استنفق بها صاحبها وكانت وديعة، عنده. قال يحيى فهذا الذي لا ادري افي حديث رسول الله صلى الله عليه وسلم هو ام شىء من عنده ثم قال كيف ترى في ضالة الغنم قال النبي صلى الله عليه وسلم " خذها فانما هي لك او لاخيك او للذيب ". قال يزيد وهى تعرف ايضا. ثم قال كيف ترى في ضالة الابل قال فقال " دعها فان معها حذاءها وسقاءها، ترد الماء وتاكل الشجر، حتى يجدها ربها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2428
- Book Index
- 3
Grades
- -
