ஹதீஸ்கள்
#2426
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத் தேன். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன. (அதை எடுத்துக்கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீர் (பொது) அறிவிப்புச் செய்வீராக!” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடை யாளம் புரிந்துகொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ‘‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்க!” என்று கூறி னார்கள். நானும் அதைப் பற்றி அறி விப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்)கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், ‘‘அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் நினைவில் வைத்திருப்பீராக! அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடுக!. இல்லையென்றால் நீரே அதைப் பயன்படுத்திக்கொள்க” என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக்கொண்டேன். அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைப் பின்னர் மக்காவில் சந்தித்தேன். அப்போது அவர்கள், ‘‘(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், யிமூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது யிஓராண்டுக் காலம்வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறியமாட்டேன்” (அதாவது ‘‘எனக்கு நினைவில்லை”) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة،. وحدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن سلمة، سمعت سويد بن غفلة، قال لقيت ابى بن كعب رضى الله عنه فقال اخذت صرة ماية دينار فاتيت النبي صلى الله عليه وسلم فقال " عرفها حولا". فعرفتها حولها فلم اجد من يعرفها، ثم اتيته فقال " عرفها حولا " فعرفتها فلم اجد، ثم اتيته ثلاثا فقال " احفظ وعاءها وعددها ووكاءها، فان جاء صاحبها، والا فاستمتع بها ". فاستمتعت فلقيته بعد بمكة فقال لا ادري ثلاثة احوال او حولا واحدا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2426
- Book Index
- 1
Grades
- -
