ஹதீஸ்கள்
#2424
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பள்ளிவாசலில்) சந்தித் தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வற்புறுத்தலானேன்.) நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘‘கஅபே!” என்றழைத்து, ‘‘பாதியை (வாங்கிக்கொள்)” என்று கூறுவது போல் தமது கையால் சைகை செய்தார்கள். எனவே, நான் இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து) விட்டு விட்டேன். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، حدثنا جعفر بن ربيعة،. وقال غيره حدثني الليث، قال حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، عن عبد الله بن كعب بن مالك الانصاري، عن كعب بن مالك رضى الله عنه انه كان له على عبد الله بن ابي حدرد الاسلمي دين، فلقيه فلزمه، فتكلما حتى ارتفعت اصواتهما، فمر بهما النبي صلى الله عليه وسلم فقال " يا كعب ". واشار بيده كانه يقول النصف، فاخذ نصف ما عليه وترك نصفا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2424
- Book Index
- 14
Grades
- -
