ஹதீஸ்கள்
#2419
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் (குர்ஆனின்) அத்தியாயம் ‘அல்ஃபுர்காû” நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி யிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி) அவர்களைக் கண்டிக்க முற் பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்றஅங்கி)யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எனக்கு ஓதிக்கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன்” என்று கூறி னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு ஹிஷாம் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். அவர் ஓத, அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று” என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, ‘‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின்படி அருளப்பட்டிருக்கிறது. ஆகவே, உங்களுக்கு எளிதானதை அதிலிருந்து ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابن شهاب، عن عروة بن الزبير، عن عبد الرحمن بن عبد القاري، انه قال سمعت عمر بن الخطاب رضى الله عنه يقول سمعت هشام بن حكيم بن حزام، يقرا سورة الفرقان على غير ما اقروها، وكان رسول الله صلى الله عليه وسلم اقرانيها، وكدت ان اعجل عليه، ثم امهلته حتى انصرف، ثم لببته بردايه فجيت به رسول الله صلى الله عليه وسلم فقلت اني سمعت هذا يقرا على غير ما اقراتنيها، فقال لي " ارسله ". ثم قال له " اقرا ". فقرا. قال " هكذا انزلت ". ثم قال لي " اقرا ". فقرات فقال " هكذا انزلت. ان القران انزل على سبعة احرف فاقرءوا منه ما تيسر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2419
- Book Index
- 9
Grades
- -
