ஹதீஸ்கள்
#2417
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
‘‘ஒருவன் ஒரு முஸ்லிமு டைய செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய் வானாயின், மறுமையில் தன்மீது கோபம் கொண்ட நிலையில்தான் அல்லாஹ்வை அவன் சந்திப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கும்போது கேட் டுக்கொண்டிருந்த அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இது நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்துவிடவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘‘(அப்படியென்றால் யிநிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறென்றால் அந்த யூதர் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்றுவிடுவாரே!” என்று கூறினேன். (அப்போதுதான் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களுடன் அல்லாஹ் பேசவும்மாட் டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (3:77) எனும் குர்ஆன் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا ابو معاوية، عن الاعمش، عن شقيق، عن عبد الله رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من حلف على يمين وهو فيها فاجر ليقتطع بها مال امري مسلم لقي الله وهو عليه غضبان ". قال فقال الاشعث في والله كان ذلك، كان بيني وبين رجل من اليهود ارض فجحدني، فقدمته الى النبي صلى الله عليه وسلم فقال لي رسول الله صلى الله عليه وسلم " الك بينة ". قلت لا. قال فقال لليهودي " احلف ". قال قلت يا رسول الله اذا يحلف، ويذهب بمالي، فانزل الله تعالى {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا} الى اخر الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2417
- Book Index
- 7
Grades
- -
