ஹதீஸ்கள்
#2413
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (‘‘ஆம், அவன்தான்” என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். நபி (ஸல்) அவர்கள் அவனது தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனது தலை நசுக்கப்பட்டது. அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا همام، عن قتادة، عن انس رضى الله عنه ان يهوديا، رض راس جارية بين حجرين، قيل من فعل هذا بك افلان، افلان حتى سمي اليهودي فاومت براسها، فاخذ اليهودي فاعترف، فامر به النبي صلى الله عليه وسلم فرض راسه بين حجرين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2413
- Book Index
- 4
Grades
- -
