ஹதீஸ்கள்
#2412
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘‘அபுல்காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார் கள். அதற்கு அவர், ‘‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரைக் கூப்பிடுங்கள்” என்றார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘‘இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘‘இவர் கடைவீதியில், யிமனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!› என்று ஆணையிட்டுக் கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், யிதீயவனே! முஹம்மத் (ஸல்) அவர்களைவிடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?› என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டுவிட, இவரது முகத்தில் அறைந்துவிட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரைவிட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிவருபவர் களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பவராகக் காண்பேன். யிமூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா; அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا عمرو بن يحيى، عن ابيه، عن ابي سعيد الخدري رضى الله عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم جالس جاء يهودي، فقال يا ابا القاسم ضرب وجهي رجل من اصحابك. فقال " من ". قال رجل من الانصار. قال " ادعوه ". فقال " اضربته ". قال سمعته بالسوق يحلف والذي اصطفى موسى على البشر. قلت اى خبيث، على محمد صلى الله عليه وسلم فاخذتني غضبة ضربت وجهه. فقال النبي صلى الله عليه وسلم " لا تخيروا بين الانبياء، فان الناس يصعقون يوم القيامة، فاكون اول من تنشق عنه الارض، فاذا انا بموسى اخذ بقايمة من قوايم العرش، فلا ادري اكان فيمن صعق، ام حوسب بصعقة الاولى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2412
- Book Index
- 3
Grades
- -
