ஹதீஸ்கள்
#2411
ஸஹீஹ் அல்-புகாரீ - Litigation
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், ‘‘உலகத்தார் அனைவரை விடவும் (சிறந்தவராக) முஹம்மத் (ஸல்) அவர்களைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘‘உலகத்தார் அனைவரைவிடவும் (சிறந்தவ ராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தமுஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் விசாரித்தார்கள். அவர் விவரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்துகொண்டபின்) நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகிவிடுவேன். நான்தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை) அவர்கள் (அல்லாஹ்வுடைய) அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா; அல்லது அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) அல்லாஹ் விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن ابي سلمة، وعبد الرحمن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال استب رجلان رجل من المسلمين ورجل من اليهود، قال المسلم والذي اصطفى محمدا على العالمين، فقال اليهودي والذي اصطفى موسى على العالمين. فرفع المسلم يده عند ذلك فلطم وجه اليهودي، فذهب اليهودي الى النبي صلى الله عليه وسلم فاخبره بما كان من امره وامر المسلم، فدعا النبي صلى الله عليه وسلم المسلم فساله عن ذلك، فاخبره فقال النبي صلى الله عليه وسلم " لا تخيروني على موسى، فان الناس يصعقون يوم القيامة، فاصعق معهم، فاكون اول من يفيق، فاذا موسى باطش جانب العرش، فلا ادري اكان فيمن صعق فافاق قبلي، او كان ممن استثنى الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Litigation
- Hadith Index
- #2411
- Book Index
- 2
Grades
- -
