ஹதீஸ்கள்
#2409
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. தமது பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தனது பொறுப்புக்கு உட்பட்ட வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் உரிமையாளனின் உடைமை களுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். ‘‘இவையனைத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பாளர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் நினைக்கிறேன். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " كلكم راع ومسيول عن رعيته، فالامام راع، وهو مسيول عن رعيته، والرجل في اهله راع، وهو مسيول عن رعيته، والمراة في بيت زوجها راعية وهى مسيولة عن رعيتها، والخادم في مال سيده راع، وهو مسيول عن رعيته ". قال فسمعت هولاء من رسول الله صلى الله عليه وسلم واحسب النبي صلى الله عليه وسلم قال " والرجل في مال ابيه راع، وهو مسيول عن رعيته، فكلكم راع، وكلكم مسيول عن رعيته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2409
- Book Index
- 24
Grades
- -
