ஹதீஸ்கள்
#2396
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில் வீர) மரணம் அடைந்தார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக) முப்பது வஸ்க்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.3 அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் அளிக்கும்படி நான் அந்த யூதரிடம் கேட்டேன். அவர் எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதையும் அந்த யூதர் மறுத்துவிட்டார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபிறகு, நான் பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸ்க்குளையும் (நிறைவாகக்) கொடுத்துவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸ்க்குகள் (அளவுக் குப் பேரீச்சங் கனிகள்) மீதியிருந்தன. பின்னர் நான் நடந்ததைத் தெரிவிப்ப தற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்ப தைக் கண்டேன். அவர்கள் (சலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதியிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் செய்தியை கத்தாபின் புதல்வரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள். எனவே, நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்சமரங்களுக் கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் யிபரக்கத்’ (அருள் வளம்) வழங்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا انس، عن هشام، عن وهب بن كيسان، عن جابر بن عبد الله رضى الله عنهما انه اخبره ان اباه توفي، وترك عليه ثلاثين وسقا لرجل من اليهود، فاستنظره جابر، فابى ان ينظره، فكلم جابر رسول الله صلى الله عليه وسلم ليشفع له اليه، فجاء رسول الله صلى الله عليه وسلم وكلم اليهودي لياخذ ثمر نخله بالذي له فابى، فدخل رسول الله صلى الله عليه وسلم النخل، فمشى فيها ثم قال لجابر " جد له فاوف له الذي له ". فجده بعد ما رجع رسول الله صلى الله عليه وسلم فاوفاه ثلاثين وسقا، وفضلت له سبعة عشر وسقا، فجاء جابر رسول الله صلى الله عليه وسلم ليخبره بالذي كان، فوجده يصلي العصر، فلما انصرف اخبره بالفضل، فقال " اخبر ذلك ابن الخطاب ". فذهب جابر الى عمر، فاخبره. فقال له عمر لقد علمت حين مشى فيها رسول الله صلى الله عليه وسلم ليباركن فيها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2396
- Book Index
- 12
Grades
- -
