ஹதீஸ்கள்
#2395
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதி யிருந்தன. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، قال حدثني ابن كعب بن مالك، ان جابر بن عبد الله رضى الله عنهما اخبره ان اباه قتل يوم احد شهيدا، وعليه دين فاشتد الغرماء في حقوقهم، فاتيت النبي صلى الله عليه وسلم فسالهم ان يقبلوا تمر حايطي ويحللوا ابي فابوا، فلم يعطهم النبي صلى الله عليه وسلم حايطي، وقال " سنغدو عليك ". فغدا علينا حين اصبح، فطاف في النخل، ودعا في ثمرها بالبركة، فجددتها فقضيتهم، وبقي لنا من تمرها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2395
- Book Index
- 11
Grades
- -
