ஹதீஸ்கள்
#2388
ஸஹீஹ் அல்-புகாரீ - Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, ‘‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்குமேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற் பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள், யிஇப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன்பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், ‘‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘‘நீ இங்கேயே இரு” என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் (நபி (ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு” என்று கூறியது என் நினைவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்ட குரல் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ‘‘உம்முடைய சமுதாயத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று கூறினார்கள். நான், ‘‘இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும் திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஆம், (அவரும்தான் சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا ابو شهاب، عن الاعمش، عن زيد بن وهب، عن ابي ذر رضى الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم فلما ابصر يعني احدا قال " ما احب انه يحول لي ذهبا يمكث عندي منه دينار فوق ثلاث، الا دينارا ارصده لدين ". ثم قال " ان الاكثرين هم الاقلون، الا من قال بالمال هكذا وهكذا ". واشار ابو شهاب بين يديه وعن يمينه وعن شماله وقليل ما هم وقال مكانك. وتقدم غير بعيد، فسمعت صوتا، فاردت ان اتيه، ثم ذكرت قوله مكانك حتى اتيك، فلما جاء قلت يا رسول الله، الذي سمعت او قال الصوت الذي سمعت قال " وهل سمعت ". قلت نعم. قال " اتاني جبريل عليه السلام فقال من مات من امتك لا يشرك بالله شييا دخل الجنة ". قلت وان فعل كذا وكذا قال " نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Loans, Payment of Loans, Freezing of Property, Bankruptcy
- Hadith Index
- #2388
- Book Index
- 4
Grades
- -
