ஹதீஸ்கள்
#2384
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள் (மரத் திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார் கள்); ‘அராயா’காரர்களைத் தவிர. நபி (ஸல்) அவர்கள், ‘அராயா’காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்துகொள்ள அனுமதியளித்தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: ‘‘புஷைர் (ரஹ்) அவர்கள் இதைப் போன்றதை (ஹதீஸை) எனக்கு அறிவித் தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا زكرياء بن يحيى، اخبرنا ابو اسامة، قال اخبرني الوليد بن كثير، قال اخبرني بشير بن يسار، مولى بني حارثة ان رافع بن خديج، وسهل بن ابي حثمة، حدثاه ان رسول الله صلى الله عليه وسلم نهى عن المزابنة بيع الثمر بالتمر، الا اصحاب العرايا فانه اذن لهم. قال ابو عبد الله وقال ابن اسحاق حدثني بشير مثله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2384
- Book Index
- 31
Grades
- -
