ஹதீஸ்கள்
#2375
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கிடைத்த பொருட்களில் (எனது பங்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கூட்டாக வயது முதிர்ந்த ஓர் ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருந்தார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். யிஇத்கிர்’ புல்லை விற்பதற்காக அதன்மீது ஏற்றிக் கொண்டுவர நான் விரும்பியிருந்தேன். அப்போது யிபனூ கைனுகா’ குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டுவர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம்புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், ‘‘ஹம்ஸாவே! இதோ! வயதான கொழுத்த ஒட்டகங்கள்! (இவற்றை அறுத்து விருந்தாளிகளுக்குப் பரிமாறிவிடுங்கள்)” என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்கள். அருவருப்பூட்டிய அந்தப் பயங்கரக் காட்சியை நான் கண்டேன். உடனே நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி (ஸல்) அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் பின் ஹாரிஸா அவர் களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தமது கோபத்தை நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தமது பார்வையை உயர்த்தி, ‘‘நீங்கள் என் முன்னோர்களின் அடிமை கள்தானே?” என்று கூறினார்கள்.12 இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரைவிட்டு அப்படியே பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார் கள். இந்த நிகழ்ச்சி மது தடை செய்யப்படு வதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களிடம், ‘‘திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா (ரலி) அவர்கள்) எடுத்துக்கொண்டார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்” என்று கூறினார்.13 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، ان ابن جريج، اخبرهم قال اخبرني ابن شهاب، عن علي بن حسين بن علي، عن ابيه، حسين بن علي عن علي بن ابي طالب رضى الله عنهم انه قال اصبت شارفا مع رسول الله صلى الله عليه وسلم في مغنم يوم بدر قال واعطاني رسول الله صلى الله عليه وسلم شارفا اخرى، فانختهما يوما عند باب رجل من الانصار، وانا اريد ان احمل عليهما اذخرا لابيعه، ومعي صايغ من بني قينقاع فاستعين به على وليمة فاطمة، وحمزة بن عبد المطلب يشرب في ذلك البيت معه قينة، فقالت الا يا حمز للشرف النواء. فثار اليهما حمزة بالسيف، فجب اسنمتهما، وبقر خواصرهما، ثم اخذ من اكبادهما. قلت لابن شهاب ومن السنام قال قد جب اسنمتهما فذهب بها. قال ابن شهاب قال علي رضى الله عنه فنظرت الى منظر افظعني فاتيت نبي الله صلى الله عليه وسلم وعنده زيد بن حارثة فاخبرته الخبر فخرج ومعه زيد، فانطلقت معه، فدخل على حمزة فتغيظ عليه فرفع حمزة بصره وقال هل انتم الا عبيد لابايي فرجع رسول الله صلى الله عليه وسلم يقهقر حتى خرج عنهم، وذلك قبل تحريم الخمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2375
- Book Index
- 23
Grades
- -
