ஹதீஸ்கள்
#2372
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லிக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்துவிடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘(பிறரது) தொலைந்துபோன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்...)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது உனக்குச் சொந்தமானது; அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது; அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘தொலைந்துபோன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (குடலும்) அதன் கால்குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக்கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக்கொள்ளும்வரை. (ஆகவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثنا مالك، عن ربيعة بن ابي عبد الرحمن، عن يزيد، مولى المنبعث عن زيد بن خالد رضى الله عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فساله عن اللقطة، فقال " اعرف عفاصها ووكاءها، ثم عرفها سنة، فان جاء صاحبها والا فشانك بها ". قال فضالة الغنم قال " هي لك او لاخيك او للذيب ". قال فضالة الابل قال " مالك ولها معها سقاوها وحذاوها، ترد الماء وتاكل الشجر، حتى يلقاها ربها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2372
- Book Index
- 20
Grades
- -
