ஹதீஸ்கள்
#2369
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்தபோது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப்பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவருடைய செல் வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிக்க விடாமல்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة لا يكلمهم الله يوم القيامة، ولا ينظر اليهم رجل حلف على سلعة لقد اعطى بها اكثر مما اعطى وهو كاذب، ورجل حلف على يمين كاذبة بعد العصر ليقتطع بها مال رجل مسلم، ورجل منع فضل ماء، فيقول الله اليوم امنعك فضلي، كما منعت فضل ما لم تعمل يداك ". قال علي حدثنا سفيان غير مرة عن عمرو سمع ابا صالح يبلغ به النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2369
- Book Index
- 17
Grades
- -
