ஹதீஸ்கள்
#2368
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (நபி) இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாருக்கு (ஹாஜருக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்) விட்டுவிட்டிருந்தால் லி (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) லி தண்ணீரைக் கையால் அள்ளாமல் இருந் திருந்தால் லி அது (நிற்காமல்) ஓடுகின்ற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) யிபனூ ஜுர்ஹும்’ குலத்தார் அங்கு வந்து, ‘‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக்கொள்ள நீங்கள் அனுமதிப் பீர்களா?” என்று (ஹாஜரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘சரி; (தங்கி வசித்துக்கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத்) தண்ணீரில் உங்களுக்கு எந்த உரிமையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார், ‘‘சரி (அவ்வாறே ஒப்புக்கொள்கிறோம்)” என்று கூறினார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن ايوب، وكثير بن كثير يزيد احدهما على الاخر عن سعيد بن جبير، قال قال ابن عباس رضى الله عنهما قال النبي صلى الله عليه وسلم " يرحم الله ام اسماعيل، لو تركت زمزم او قال لو لم تغرف من الماء لكانت عينا معينا، واقبل جرهم فقالوا اتاذنين ان ننزل عندك قالت نعم ولا حق لكم في الماء. قالوا نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2368
- Book Index
- 16
Grades
- -
