ஹதீஸ்கள்
#2366
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (பானம் உள்ள) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப் பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக்கூடிய எனது பங்கை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا عبد العزيز، عن ابي حازم، عن سهل بن سعد رضى الله عنه قال اتي رسول الله صلى الله عليه وسلم بقدح فشرب وعن يمينه غلام، هو احدث القوم، والاشياخ عن يساره قال " يا غلام اتاذن لي ان اعطي الاشياخ ". فقال ما كنت لاوثر بنصيبي منك احدا يا رسول الله. فاعطاه اياه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2366
- Book Index
- 14
Grades
- -
