ஹதீஸ்கள்
#2365
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனை செய்யப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்துவைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது லிஅல்லாஹ்வே மிக அறிந்தவன்லி ‘‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட் டும் என்று அதை அவிழ்த்துவிடவு மில்லை” என்று அல்லாஹ் கூறினான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " عذبت امراة في هرة حبستها، حتى ماتت جوعا، فدخلت فيها النار قال فقال والله اعلم لا انت اطعمتها ولا سقيتها حين حبستيها، ولا انت ارسلتيها فاكلت من خشاش الارض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2365
- Book Index
- 13
Grades
- -
