ஹதீஸ்கள்
#2364
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன் னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘‘இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப்போகிறேனோ?› என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக்கொண்டிருந்தது. ‘‘இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனை செய்யப்படு கிறாள்?)” என்று நான் கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), ‘‘இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் சாகும்வரை இந்தப் பெண் கட்டிவைத்திருந்தாள்” என்று பதிலளித்தனர்.8 இந்த அறிவிப்பின் இடையே, ‘ ’ ‘அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்” என அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا نافع بن عمر، عن ابن ابي مليكة، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم صلى صلاة الكسوف، فقال " دنت مني النار حتى قلت اى رب، وانا معهم فاذا امراة حسبت انه قال تخدشها هرة قال ما شان هذه قالوا حبستها حتى ماتت جوعا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2364
- Book Index
- 12
Grades
- -
