ஹதீஸ்கள்
#2363
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) யிஎனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதை வாயால் கவ்விக்கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அவருடைய இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்றும் பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமை யில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن سمى، عن ابي صالح، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " بينا رجل يمشي فاشتد عليه العطش، فنزل بيرا فشرب منها، ثم خرج فاذا هو بكلب يلهث، ياكل الثرى من العطش، فقال لقد بلغ هذا مثل الذي بلغ بي فملا خفه ثم امسكه بفيه، ثم رقي، فسقى الكلب فشكر الله له، فغفر له ". قالوا يا رسول الله، وان لنا في البهايم اجرا قال " في كل كبد رطبة اجر ". تابعه حماد بن سلمة والربيع بن مسلم عن محمد بن زياد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2363
- Book Index
- 11
Grades
- -
