ஹதீஸ்கள்
#2362
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமி டத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம்மிடம் இந்த வழக்கு வந்தபோது), ‘‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டையதோப்பு)க்கு அதை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?” என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும்வரை தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள் (பிறகு விட்டுவிடுங்கள்)” என்று கூறி, ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘ ‘(உங்கள் மரங் களுக்கு) நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்’ எனும் (இந்த) நபிமொழியை அடிப்படை யாகக் கொண்டுதான், யிதண்ணீர் கணுக்கால் கள்வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்ட தாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டுக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا مخلد، قال اخبرني ابن جريج، قال حدثني ابن شهاب، عن عروة بن الزبير، انه حدثه ان رجلا من الانصار خاصم الزبير في شراج من الحرة يسقي بها النخل. فقال رسول الله صلى الله عليه وسلم " اسق يا زبير فامره بالمعروف ثم ارسل الى جارك ". فقال الانصاري ان كان ابن عمتك. فتلون وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال " اسق ثم احبس حتى يرجع الماء الى الجدر ". واستوعى له حقه. فقال الزبير والله ان هذه الاية انزلت في ذلك {لا وربك لا يومنون حتى يحكموك فيما شجر بينهم}. قال لي ابن شهاب فقدرت الانصار والناس قول النبي صلى الله عليه وسلم " اسق ثم احبس حتى يرجع الى الجدر ". وكان ذلك الى الكعبين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2362
- Book Index
- 10
Grades
- -
