ஹதீஸ்கள்
#2361
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரி தோழருடன் (பேரீச் சந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில்) சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்காகச் சென்றபோது) நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! (மேட்டிலிருக்கும் உங்கள் தோப்புக்குத்) தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு (அதை அன்சாரியின் தோப்புக்கு) அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே அன்சாரி தோழர், ‘‘அவர் உங்கள் அத்தை மகன் ஆயிற்றே! (அதனால் தான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறீர்கள்”) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! வரப்பை அடையும்வரை நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு (பின்னர் அன்சாரியின் தோப்புக்கு) அதைத் திறந்து அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘திருக்குர்ஆனின் இந்த (4:65) வசனம் இந்த விவகாரம் குறித்துத்தான் இறங்கியது என நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن عروة، قال خاصم الزبير رجل من الانصار، فقال النبي صلى الله عليه وسلم " يا زبير اسق ثم ارسل ". فقال الانصاري انه ابن عمتك. فقال عليه السلام " اسق يا زبير، ثم يبلغ الماء الجدر، ثم امسك ". فقال الزبير فاحسب هذه الاية نزلت في ذلك {لا وربك لا يومنون حتى يحكموك فيما شجر بينهم}. قال محمد بن العباس قال ابو عبد الله ليس احد يذكر عروة عن عبد الله، الا الليث فقط
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2361
- Book Index
- 9
Grades
- -
