ஹதீஸ்கள்
#2359
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்பு களுக்கு நீர் பாய்ச்சிவந்த யிஹர்ரா’ (எனுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரி தோழர், ‘‘தண் ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி தோழர் கோபம் கொண்டு, ‘‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?” என்று கேட்டார்.7 இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடை யும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறி விட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், ‘‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர், நீங்கள் அளிக் கின்ற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்’ எனும் (4:65) திருக் குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2359
- Book Index
- 8
Grades
- -