ஹதீஸ்கள்
#2357
ஸஹீஹ் அல்-புகாரீ - Distribution of Water
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன்மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனைச் சந்திப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘‘எவர் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அவர்களிடம் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்க வும்மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது” (3:77) எனும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி), ‘‘அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கி யது. என் தந்தையின் சகோதரர் மகனு டைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் நான் வந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?› என்று கேட்டார்கள். நான், ‘‘என்னிடம் சாட்சிகள் இல்லை” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையதுதான்’ என்று) சத்தியம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். நான், ‘‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே” என்று கூறினேன். அப்போதுதான், நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن شقيق، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من حلف على يمين يقتطع بها مال امري، هو عليها فاجر، لقي الله وهو عليه غضبان" فانزل الله تعالى {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا} الاية. فجاء الاشعث فقال ما حدثكم ابو عبد الرحمن، في انزلت هذه الاية، كانت لي بير في ارض ابن عم لي فقال لي " شهودك ". قلت ما لي شهود. قال " فيمينه ". قلت يا رسول الله اذا يحلف. فذكر النبي صلى الله عليه وسلم هذا الحديث، فانزل الله ذلك تصديقا له
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Distribution of Water
- Hadith Index
- #2357
- Book Index
- 6
Grades
- -
