ஹதீஸ்கள்
#2349
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்துவந்தோம். ஏனெனில், எங்களுடன் மூதாட்டி ஒருவர் நட்பாக இருந்தார். அவர், எங்கள் நீரோடைகளின் ஓரமாக நாங்கள் நட்டு வந்த யிசில்க்’ என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தமது பாத்திர மொன்றில் போட்டு, அவற்றுடன் தொலி நீக்கப்படாத கோதுமை வித்துகள் சில வற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவார். நாங்கள் ஜுமுஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்த மூதாட்டியைச் சந்திப்போம். அவர் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவார். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம். இதன் மூன்றாவது அறிவிப்பாளரான யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இரண்டாம் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘அந்த உணவு கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் அற்றதாக இருந்தது” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا يعقوب، عن ابي حازم، عن سهل بن سعد رضى الله عنه انه قال انا كنا نفرح بيوم الجمعة، كانت لنا عجوز تاخذ من اصول سلق لنا كنا نغرسه في اربعاينا فتجعله في قدر لها فتجعل فيه حبات من شعير لا اعلم الا انه قال ليس فيه شحم ولا ودك، فاذا صلينا الجمعة زرناها فقربته، الينا فكنا نفرح بيوم الجمعة من اجل ذلك وما كنا نتغدى ولا نقيل الا بعد الجمعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2349
- Book Index
- 27
Grades
- -
