ஹதீஸ்கள்
#2348
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், கிராம வாசி ஒருவர் தம்மிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘‘நீ விரும்பிய (இன்பமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்துகொண்டிருக்க வில்லையா?” என்று கேட்பான். அதற்கு அவர், ‘‘ஆம். (நான் விரும்பியபடியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவிவிடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்துவிடும். அப்போது இறைவன், ‘‘எடுத்துக்கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத் தாது” என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள்தான் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا فليح، حدثنا هلال، وحدثنا عبد الله بن محمد، حدثنا ابو عامر، حدثنا فليح، عن هلال بن علي، عن عطاء بن يسار، عن ابي هريرة رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان يوما يحدث وعنده رجل من اهل البادية " ان رجلا من اهل الجنة استاذن ربه في الزرع فقال له الست فيما شيت قال بلى ولكني احب ان ازرع. قال فبذر فبادر الطرف نباته واستواوه واستحصاده، فكان امثال الجبال فيقول الله دونك يا ابن ادم، فانه لا يشبعك شىء ". فقال الاعرابي والله لا تجده الا قرشيا او انصاريا، فانهم اصحاب زرع، واما نحن فلسنا باصحاب زرع. فضحك النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2348
- Book Index
- 26
Grades
- -
