ஹதீஸ்கள்
#2339
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (உடனே), ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதே சரியானது” என்று நான் கூறினேன். (அதற்கு) அவர் சொன்னார்: ஒரு முறை என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, ‘‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில யிவஸ்க்’குகள் பேரீச்சம் பழங்களை அல்லது தொலி நீக்கப்படாத கோதுமையை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விட்டுவிடு கின்றோம்” என்று நான் பதிலளித்தேன். அதற்கு நபியவர்கள், ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைமாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்துவிடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) நான், ‘‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினேன். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا الاوزاعي، عن ابي النجاشي، مولى رافع بن خديج سمعت رافع بن خديج بن رافع، عن عمه، ظهير بن رافع قال ظهير لقد نهانا رسول الله صلى الله عليه وسلم عن امر كان بنا رافقا. قلت ما قال رسول الله صلى الله عليه وسلم فهو حق. قال دعاني رسول الله صلى الله عليه وسلم قال " ما تصنعون بمحاقلكم ". قلت نواجرها على الربع وعلى الاوسق من التمر والشعير. قال " لا تفعلوا ازرعوها او ازرعوها او امسكوها ". قال رافع قلت سمعا وطاعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2339
- Book Index
- 20
Grades
- -
