ஹதீஸ்கள்
#2338
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்தி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபொழுது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டுவிட்டபொழுது அந்தப் பகுதியி லிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்திவிடுகிறோம்)” என்று கேட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும்வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்” என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயி ரிட்டு வரி செலுத்தி) வசித்துவந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2338
- Book Index
- 19
Grades
- -