ஹதீஸ்கள்
#2332
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவாசிகளிலேயே அதிகமாகப் பண்ணை வயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது நிலத்தின் உரிமையாளரிடம், ‘‘(நிலத்தின்) இந்தத் துண்டு(டைய விளைச்சல் குத்தகைப் பங்காக) உஙகளுக்குரியது. இந்தத் துண்டு(டைய விளைச்சல்) எங்களுக்குரியது” என்று சொல்வது வழக்கம். சில வேளைகளில், நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் தரும்; இன்னொரு பகுதி விளைச்சல் தராது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நிபந்தனையிட வேண்டாமென்று எங்களைத் தடுத்து விட்டார்கள்.8 அத்தியாயம் :
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، عن يحيى، سمع حنظلة الزرقي، عن رافع رضى الله عنه قال كنا اكثر اهل المدينة حقلا، وكان احدنا يكري ارضه، فيقول هذه القطعة لي وهذه لك، فربما اخرجت ذه ولم تخرج ذه، فنهاهم النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2332
- Book Index
- 13
Grades
- -
