ஹதீஸ்கள்
#2328
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனை யின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற் காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி யளித்து) ஒப்பந்தம் செய்துகொண் டார்கள். இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிலிருந்து, நபி (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்கு எண்பது யிவஸ்க்’குகள் பேரீச்சம்பழமும் இருபது யிவஸ்க்’குகள் தொலிநீக்கப்படாத கோதுமையும் ஆக, நூறு யிவஸ்க்’குகள் கொடுத்துவந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக வந்தபோது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக்கொள்வது, அல்லது முன்பு நடைபெற்று வந்த வழக்கத்தின்படியே, நூறு யிவஸ்க்’குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக்கொள்வது என்று இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றுக் கொண்டனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) யிவஸ்க்’குகளையே தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، حدثنا انس بن عياض، عن عبيد الله، عن نافع، ان عبد الله بن عمر رضى الله عنهما اخبره ان النبي صلى الله عليه وسلم عامل خيبر بشطر ما يخرج منها من ثمر او زرع، فكان يعطي ازواجه ماية وسق ثمانون وسق تمر وعشرون وسق شعير، فقسم عمر خيبر، فخير ازواج النبي صلى الله عليه وسلم ان يقطع لهن من الماء والارض، او يمضي لهن، فمنهن من اختار الارض ومنهن من اختار الوسق، وكانت عايشة اختارت الارض
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2328
- Book Index
- 9
Grades
- -
