ஹதீஸ்கள்
#2327
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) யிநிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் உரிமையாளருக்குரியது’ என்ற நிபந்தனை யுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (நோய்களாலும் பூச்சிகளாலும்) பாதிக்கப்பட்டுவிடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப் பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக்கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக்கொள்ளும். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டா மென்று தடை செய்யப்பட்டோம். அந் நாட்களில் தங்கமும் வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப் படும் வழக்கம்) இருக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا عبد الله، اخبرنا يحيى بن سعيد، عن حنظلة بن قيس الانصاري، سمع رافع بن خديج، قال كنا اكثر اهل المدينة مزدرعا، كنا نكري الارض بالناحية منها مسمى لسيد الارض، قال فمما يصاب ذلك وتسلم الارض، ومما يصاب الارض ويسلم ذلك، فنهينا، واما الذهب والورق فلم يكن يوميذ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2327
- Book Index
- 8
Grades
- -
