ஹதீஸ்கள்
#2324
ஸஹீஹ் அல்-புகாரீ - Agriculture
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்துகொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, யிநான் இதற்காக (சுமை சுமந்துசெல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒருமுறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, யிகொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டாú” என்று கூறியது. நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூசலமா (ரஹ்) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن سعد، سمعت ابا سلمة، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " بينما رجل راكب على بقرة التفتت اليه. فقالت لم اخلق لهذا، خلقت للحراثة، قال امنت به انا وابو بكر وعمر، واخذ الذيب شاة فتبعها الراعي، فقال الذيب من لها يوم السبع، يوم لا راعي لها غيري. قال امنت به انا وابو بكر وعمر ". قال ابو سلمة ما هما يوميذ في القوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Agriculture
- Hadith Index
- #2324
- Book Index
- 5
Grades
- -
